நவராத்திரி விழாவில் பால் குடம் எடுத்த பக்தர்கள்- உஜ்ஜையினி அம்மன் கோயிலில் நடந்த வினோதம்!
நடப்பு ஆண்டு நவராத்திரித் திருவிழா வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் ஒன்பது நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.
ராமேஸ்வரம்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் உள்ள உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் நவராத்திரித் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டாலும், அனைத்து இடங்களிலும் ஒரே பெயரில் கொண்டாடப்படுவது கிடையாது.
ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப, அந்தந்த இடங்களில் உள்ள கலாச்சார சூழ்நிலைகளுக்கு ஏற்றவாரும், பாரம்பரிய முறைப்படியும் பழங்காலந்தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது என்பது இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும்.
நடப்பு ஆண்டு நவராத்திரித் திருவிழா வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் ஒன்பது நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். இந்நாட்களில், மாலை 7 மணி முதல் இரவு 9:30 மணி வரை தேவி வழிபாட்டுக்கு உகந்த நேரமாகும்.
உஜ்ஜயினி மாகாளி அம்மன்
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் அருள்பாலிக்கும் உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்குப் பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் சுமத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் பெற்றனர்.

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
