காலண்டர் குழப்பத்தால் சதுரகிரிக்கு பக்தர்கள் படையெடுப்பு
காலண்டரில் பவுர்ணமி தேதி குழப்பத்தால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் படையெடுத்த சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் இருக்கிறது. கடந்த 24ம் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மாசி பவுர்ணமியாக இருந்தும் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. காலண்டரில் நேற்று இரவு தான் மாசி பவுர்ணமி என்று குறிப்பிட்டதால் பக்தர்கள் எண்ணிக்கை வருகை அதிகரித்தது. நேற்று அதிகாலை 3 மணியிலிருந்து சென்னை, கோவை, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன் குவிந்தனர்.
காலை 6 மணிக்கு சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களின் உடமைகளை சோதனை செய்த பின்பே வனத்துறை அனுமதித்துள்ளது. சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்ததால் மகாராஜபுரம் விலக்கு பகுதியில் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கிருந்து தாணிப்பாறை அடிவாரம் வரை 4 கி.மீ ெதாலைவிற்கு பக்தர்கள் நடந்தே வந்தனர். இதில் முதியவர்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். டனர்.