தலையில் ஒரே பேன் தொல்லையா? இதை செய்தாலே போதும் : பேன் பரவுவதை தடுத்து விடலாம்

பேன்தொல்லை தலைமுடிபராமரிப்பு கூந்தல்பராமரிப்பு இயற்கைஅழகு
By Swetha Subash Apr 18, 2022 02:54 PM GMT
Report

பெண்களுக்கு பொதுவாகவே தலையில் பேன் தொல்லை இருப்பது இயற்கை தான். இந்த பேன் பிரச்சினையால் பல பெண்கள் பாதிக்க படுகின்றனர்.

பேன்கள் தலை, முடி, முதுகு மற்றும் கழுத்து பகுதிகளில் ஊர்ந்து, நமது ரத்தத்தை உறிஞ்சுகின்றன. பேன்களின் முட்டைகள் முடியுடன் ஒட்டிக்கொண்டு மேலும் அரிப்பை ஏற்படுத்துகிறது.

பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது. ஒருவரின் தலையிலிருந்து மற்றொருவருக்கு பேன்கள் உருவாகின்றன. பேனால் குதிக்கவோ அல்லது பறக்கவோ முடியாது. ஆனால் முடியின் வழியாக பேன் மற்றொருவருக்கு பரவுகிறது.

தலையில் ஒரே பேன் தொல்லையா? இதை செய்தாலே போதும் : பேன் பரவுவதை தடுத்து விடலாம் | Natural Methods To Prevent Head Lice

அதனால் தலையில் பேன் இருப்பது கெட்ட மற்றும் சுகாதாரமின்மை பிரச்சினை அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். பேன் இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதால் இரவுநேரங்களில் தூக்கமின்மைக்கு பேன்கள் கூட ஒரு காரணமாக இருக்க முடியும்.

இந்த பிரச்சினையை எளிய முறைகளில் தடுத்து விடலாம். அதன்படி, நீங்கள் உபயோகிக்கும் சீப்புகள், தலையில் இடும் கேப்ஸ் (Cap), தூரிகைகள் போன்ற கூந்தல் பராமரிப்பு பொருட்களை வெந்நீரில் ஊற வைத்து கழுவ வேண்டும்.

வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு சுத்தம் செய்வதை வழக்கமாக்கி கொள்ளவும். சீப்புகள், முடி தூரிகை போன்ற பொருட்களை பகிர்ந்து கொள்வதை நிறுத்துங்கள்.

முடிந்தவரை அடிக்கடி உங்கள் பெட்ஷீட்டுகளை மாற்றி உங்கள் துணிகளை வெந்நீரில் ஊற வைத்து கழுவவும், இதனால் பேன்களை அகற்றி, பேன்கள் பரவுவதை தடுக்க முடியும்.

தலை மற்றும் முடிக்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தடவவும். தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பேன்களை அழிக்க உதவும்.