சிட்னி டெஸ்ட் அணியில் தேர்வாகாத நடராஜன்!!!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜன் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.
ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றாலும், டி20 தொடரை 2-1 என வென்றது, இதுவரையிலும் டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்துள்ள நிலையில், நாளை 3வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்திய அணியிலிருந்து மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ள நிலையில், காயம் காரணமாக உமேஷ் யாதவ் விலகியுள்ளார்.
இதனால் தமிழக வீரரான நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்பட்டது, ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரோஹித் சர்மா, சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எனினும் 4-வது டெஸ்டிலாவது நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசையாகும்.
ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை IBC Tamil