தவெக - அதிமுக கூட்டணி அமையுமா? உறுதி செய்த நத்தம் விஸ்வநாதன்

Tamil nadu ADMK Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Feb 08, 2025 05:30 PM GMT
Report

தவெக - அதிமுக கூட்டணி குறித்து நத்தம் விஸ்வநாதன் பதிலளித்துள்ளார்.

தவெக - அதிமுக கூட்டணி

திண்டுக்கல் நத்தம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

edappadi palanisamy

அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் இதுவரை களத்தில் இறங்கி வரவில்லை, கருத்து கூற ஒன்றுமில்லை. விஜய் இன்னும் அவருடைய செல்வாக்கை நிரூபிக்கவில்லை. செல்வாக்கை நிரூபிக்காமல் எதுவும் சொல்ல முடியாது. அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு செய்திகள் இல்லை.

பெரியாரால் இல்லை; சீமான் கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டாரு - அண்ணாமலை நறுக்..

பெரியாரால் இல்லை; சீமான் கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டாரு - அண்ணாமலை நறுக்..

முன்னாள் அமைச்சர் பதில்

தேர்தலை சந்தித்து இருந்தால் கருத்து கூறலாம். விஜய் வெற்றி பெறலாம், வெற்றி பெறாமலும் போகலாம். அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு அபிப்பிராயம் இல்லை. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையலாம், அமையாமலும் போகலாம். கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்ய முடியும்.

natham viswanathan

திமுகவும், ஊழலும் கூட பிறந்தது. திமுக என்றாலே ஊழல் என்று அர்த்தம். இரண்டையும் தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. திமுக அரசிற்கு எதிராகத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். இன்று கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட கதிதான் நாளை திமுகவுக்கும் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.