இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இடம்பெறுவாரா நடராஜன்?
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நடராஜன் இடம்பெறுவது சந்தேகம் என தெரிவிக்கப்படுகிறது. ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடி உலக அளவில் பிரபலபமானார் நடராஜன். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இடம்பிடித்துள்ளார், ஆனால் கடந்த கிரிக்கெட் போட்டிகளில் நடராஜன் தோள் பட்டை மற்றும் முட்டியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் பங்கேற்க சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தன்னுடைய உடற் தகுதியை உறுதி செய்ய பயிற்சியும், காயம் குணமடைவதற்கான மருத்துவ ஆலோசனையும் பெற்று வருகிறார் நடராஜன்.
அங்கு உடற்தகுதி சோதனையை மேற்கொண்ட பின்னரே அணியில் இடம்பிடிப்பது உறுதியாகும் என தெரியவந்துள்ளது.