இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜன் இடம்பெறவில்லை

india test sports
By Jon Jan 20, 2021 02:11 PM GMT
Report

இங்கிலாந்து அணியுடன் மோதவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகள் பிப்ரவரி மாதத்தில் தொடங்குகிறது.

இந்தியா வரும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இந்நிலையில் முதல் இரு போட்டிகளுக்கான அணி வீரர்களை மட்டும் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அணிக்கு கேப்டன் கோலி திரும்பியுள்ளார், காயம் காரணமாக ஆஸி. தொடருக்குச் செல்லாமல் தவிர்த்த வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா இந்திய அணிக்குள் வந்துள்ளார்.

சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் அணியில் இடம் பெற்றுள்ளார். அதேசமயம், ஆஸ்திரேலியத் தொடரில் கடைசி டெஸ்ட்டில் அறிமுகமான தமிழக வீரர் நடராஜனுக்கு முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, விருத்திமான் சஹா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் (உடல் தகுதி அடிப்படையில்), ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல்.