Wednesday, May 7, 2025

நடிகர் சங்க கட்டிட நிதி மோசடி - சிக்கலில் தலைவர் நாசர்!! அதிர்ச்சி தகவல்

Nassar Vishal Tamil Cinema Tamil Actors
By Karthick a year ago
Report

நடிகர் சங்கம் கட்டுவதற்காக பல நடிகர்களும் நன்கொடை வழங்கி வருகிறார்கள்.

நடிகர் சங்க கட்டிடம்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நீண்ட காலமாக நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. அது பல முறையாக தள்ளிப்போய் வருகின்றது. நடிகர் விஷாலின் அதிரடி கருத்துக்களும் இணைந்து நடிகர் சங்க கட்டிடம் குறித்து பேச்சுக்கள் பொதுமக்களிடையேயும் பெரும் கவனத்தை பெற்றன.

nassar complaint fake money chennai police

தொடர்ந்து தடாலடியாக நடிகர் சங்கம் கட்டி முடித்தால் தான், திருமணம் செய்து கொள்வேன் என்பதிலும் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகின்றார் விஷால்.

விஜய் CAA அறிக்கை 2 வரி'ல தான் இருக்கு..இன்னும் முழுசா..! கமீலா நாசர் பரபரப்பு பேட்டி

விஜய் CAA அறிக்கை 2 வரி'ல தான் இருக்கு..இன்னும் முழுசா..! கமீலா நாசர் பரபரப்பு பேட்டி

இந்நிலையில், தான் பல நடிகர்களும் இந்த கட்டிடம் கட்டுவதற்காக நிதி வழங்கி வருகிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக நடிகர் நாசர் பதவி வகித்து வருகிறார்.

புகார் 

இவர் தற்போது இந்த கட்டிடம் கட்டுவது தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அவர் அளித்த புகாரில், தன் பெயரில் சிலர் போலியாக இணையத்தில் ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் தளப் பக்கங்களை உருவாக்கி பொதுமக்களிடம் ஏமாற்றி கட்டிடத்திற்காக நிதி பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

nassar complaint fake money chennai police

இப்புகார் சென்னை பரங்கிமலை சைபர்கிரைம் பிரிவு காவல் நிலையத்திலும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில் தற்போது விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில், சமூகவலைத்தளங்களில் இது போன்ற போலி விவரங்களின் மூலம் யாரும் நிதி உதவி அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.