இது தான் நட்சத்திரங்கள் உருவாகும் இடம் : அறிய புகைப்படங்களை வெளியிட்ட நாசா

NASA
By Irumporai Jul 13, 2022 05:42 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது.

ஜேம்ஸ் வெப் என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம் 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கி ஏவப்பட்டது.

இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இது தான் நட்சத்திரங்கள் உருவாகும் இடம் : அறிய புகைப்படங்களை வெளியிட்ட நாசா | Nasas Reveals Cosmic Cliffs Glittering Landscape

இந்த நிலையில் நாசா சில புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது, அதில் பூமியில் இருந்து 8 ஆயிரத்து 500 ஓளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கரீனா நிபுலா பிரபஞ்சம்.

1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஸ்பெக்டர்ம் பிரபஞ்சம், 2 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சதர்ன் ரிங் நிபுலா பிரபஞ்சம்.

290 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஸ்டீபன்ஸ் குவாண்ட் எனப்படும் 5 விண்மீன்களின் தொகுப்பு ஆகிய பிரபஞ்சத்தின் புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

நாசா வெளியிட்ட புகைப்படங்கள்

இந்நிலையில், கரீனா நிபுலா என்ற பிரபஞ்சத்தில் மலை முகடு போன்ற பகுதியில் நட்சத்திரங்கள் ஒளிரும் நிகழ்வை 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது.

வரலாற்றில் புதிய மைல்கல்

இது தான் நட்சத்திரங்கள் உருவாகும் இடம் : அறிய புகைப்படங்களை வெளியிட்ட நாசா | Nasas Reveals Cosmic Cliffs Glittering Landscape

கரீனா நிபுலாவின் என்.ஜி.சி. 3324 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பகுதியில் இருந்தே நட்சத்திரங்கள் உருவாகலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபஞ்சம் குறித்த அறிய தகவல்கள்

இந்த பகுதியில் சிறிய முதல் பெரிய நட்சத்திரங்கள் ஒளிர்வதை தொலைநோக்கி புகைப்படமாக எடுத்துள்ளது. கரீனா நிபுலா பிரபஞ்சம் வாயு, துகள்கள் நிரம்பியதாகவும் அந்த மலை முகடு போன்ற பகுதியில் இருந்து நட்சத்திரம் உருவாகுவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளி மண்டலத்தின் முதல் நட்சத்திரம் உருவானது எப்படி ? - நாசா வெளியிட்ட முதல் புகைப்படம்

நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் பிரபஞ்சம் குறித்த பலவேறு புதிர்களுக்கு விடை கிடைக்கும் என கருதப்படுகிறது.