விண்வெளி மண்டலத்தின் முதல் நட்சத்திரம் உருவானது எப்படி ? - நாசா வெளியிட்ட முதல் புகைப்படம்

NASA
By Irumporai Jul 12, 2022 05:21 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பால்வழி அண்டத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டறியும் உலகின் மிகப் பெரிய விண்வெளி தொலைநோக்கி்யான ஜேம்ஸ் வெப்-ன் முதல் படத்தை நாசா வெளியட்டுள்ளது.

விண்வெளி மண்டலத்தின் முதல் நட்சத்திரம் உருவானது எப்படி ? - நாசா வெளியிட்ட முதல் புகைப்படம் | First Color Image Release Of Space Telescope

நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த 'ஜேம்ஸ் வெப்' விண்வெளி தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வு பணியினை மேற்கொள்ளும் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி , பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரம் குறித்து ஆரய்ச்சி நடத்தும் இந்த தொலைநோக்கி இது வரை விண்வெளி குறித்து மனித குலம் அறியாத பல தகவல்களை வரும் ஆண்டுகளில் அளிக்க உள்ளது ஜேம்ஸ் வெப் .

இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள நாசா தனது ட்விட்டர் பதிவில் :

இது வரை பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அக சிவப்பு காட்சி.இது வெப் தொலைநோக்கி மூலமாக கன்ணுக்கு தெரியாத விண்மீன் கூட்டங்களின் தொகுப்பு.முழு வண்ணப்படங்களும் ஜூலை 12 ம் வெளியிடப்படும் எனக் கூறியுள்ளது.   

இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது ட்விட்டர் பதிவில் :

இன்று ஒரு வரலாற்று நாள்...அமெரிக்கா மற்றும் அனைத்து மனித இனத்திற்கும் இது ஒரு வரலாற்று தருணம்" என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேசுகையில் :

"இது நம் அனைவருக்கும் மிகவும் உற்சாகமான தருணம். இன்று பிரபஞ்சத்திற்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயம்" என்றார்.