பூமியை நோக்கி 65,000 கி.மீ., வேகத்தில் வரும் சிறுகோள் - நாசா எச்சரிக்கை!
சிறுகோள் பூமியை நோக்கி வருவதாக நாசா எச்சரித்துள்ளது.
2024 MT1
பூமியை நோக்கி 2024 MT1 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று மணிக்கு 65,215 கி.மீ., வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
சுமார் 260 அடி விட்டம் கொண்ட இந்த சிறுகோள், அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட பெரியது. சுமார் 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் வரும். நாளை (ஜூலை.8) பூமிக்கு மிக அருகில் வரும்.
நாசா எச்சரிக்கை
இந்த சிறுகோள் பூமி மீது மோதுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றாலும், ஒருவேளை பூமியுடன் மோதினால் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், இந்த சிறுகோளின் படங்களையும், தரவுகளை சேகரிக்க வானியலாளர்கள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தயாராகி வருகின்றனர்.
இதன்மூலம் சூரிய குடும்பம் மற்றும் கிரகங்களின் தோற்றம் பற்றிய விவரங்களை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.