இனி வானில் தெரியப்போகும் 2 நிலா; விண்னில் ஓர் அதிசயம் - எப்போது தெரியுமா?

NASA
By Sumathi Sep 28, 2024 08:30 AM GMT
Report

பூமிக்கு 2 மாதங்களுக்கு மட்டும் தற்காலிக நிலா கிடைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக நிலா

பூமியை நிலா சுற்றி வருவது போல், விண்கல் ஒன்று பூமியை சிறிது காலம் சுற்றிவிட்டு செல்லவுள்ளது. இந்த விண்கல் குறித்து கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாசா கண்டறிந்துள்ளது.

temporary moon

33 அடி விட்டம் கொண்ட இந்த விண்கல், வரும் 29-ஆம் தேதி (நாளை) முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை பூமியை சுற்றிவர உள்ளது. 55 நாட்கள் சுற்றி வரும் இந்த விண்கல்லுக்கு, ‘2024 பிடி5’ என பெயரிடப்பட்டுள்ளது.

கிழக்கு நோக்கி நகரும் பூமி; நெருங்கி வரும் பேராபத்து - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

கிழக்கு நோக்கி நகரும் பூமி; நெருங்கி வரும் பேராபத்து - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!


நாசா அறிவிப்பு

மேலும் இந்த விண்கல் பூமியை முழுவதும் சுற்றாது என்றும், ஒரு வில் வடிவத்தில் மட்டும் பூமியை சுற்றிவிட்டு, பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து வெளியேறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமி அவ்வப்போது வான்வெளியில் வரும் இதுபோன்ற விண்கற்களை ஈர்த்துக்கொள்ளும்.

இனி வானில் தெரியப்போகும் 2 நிலா; விண்னில் ஓர் அதிசயம் - எப்போது தெரியுமா? | Nasa Says Earth Will Get A Temporary New Moon

அதனுடைய சுற்றுப்பாதை வேகத்தை விடவும், பூமியின் விசையீர்ப்பு அதிகமாக இருந்தால், அந்த விண்கற்கள் பூமியில் வந்து விழும். இல்லையென்றால் தற்போது வரும் விண்கல்லை போல பூமியின் பாதைக்கு வந்து விலகிச்செல்லும்.

கடந்த 2006-ஆம் ஆண்டும் இதேபோல் ஒரு விண்கல் பூமியின் சுற்றுப்பாதைக்கு வந்து, பூமியை சுற்றி வந்ததாக விஞ்ஞானிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.