மண்ணை சேகரித்து 7 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு வந்த விண்கலம் - 2 கோடி கி.மீ சாதனை பயணம்!
பென்னு விண்கல் மாதிரியுடன் பூமியை நோக்கி வந்த ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலத்தை பத்திரமாக தரையிறக்கியது நாசா.
ஓசிரிஸ் ரெக்ஸ்
பூமியை நோக்கி சிறு கொள் (ராட்சச விண்கலம் ) ஒன்று நெருங்கி வருவதை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) தெரிந்து கொண்டனர்.
இதனால் அதை ஆய்வு செய்ய திட்டமிட்டு அதற்காக கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது நாசா. பூமியை நெருங்கி வரும் அந்த சிறுகோலுக்கு பென்னு என்று நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டனர். ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலத்தை சுமார் 2 கோடி கிமீ தூரம், 2 ஆண்டுகள் பயணப்பட வைத்து, 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி விண்கல்லை நெருங்க வைத்தனர்.
இதனையடுத்து ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் தனது இயந்திர கைகளால் விண்கல்லின் மாதிரியை தனது கேப்ஸ்யூலில் சேகரித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு பூமியை நோக்கி புறப்பட்டது விண்கலம். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு பூமியை எட்டிய விண்கலத்தில் இருந்து கேப்ஸ்யூல் எனப்படும் கொள்கலன் தனியாக பிரிந்தது.
நாசா ஆய்வு
பூமியின் வளிமண்டலத்தை தொட்டதும் நெருப்பு பிழம்பை போல் காட்சியளித்த கொள்கலன் தோட்டாவை விட 15 மடங்கு வேகத்தில் நிலத்தை நோக்கி வந்தது. பின்னர் பாராஷூட் மூலமாக அதன் வேகம் குறைக்கப்பட்டு, முன் கூட்டியே திட்டமிட்டபடி அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் பத்திரமாக நேற்று தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில் கேப்ஸ்யூலில் சேகரிக்கப்பட்ட பென்னு சிறுகோள்ன் மாதிரியை உடனடியாக நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இதன் மூலம் சூரிய குடும்பம் எவ்வாறு உருவானது என்பது குறித்தும், அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும் தெரியவரும் என்று நம்பப்படுகிறது.
மேலும், கோள்கள் எவ்வாறு உருவாகின என்பது குறித்தும், இந்த பூமி உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக எவ்வாறு மாறியது என்பது குறித்தும் தெரியவரும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மனிதனின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக கருதப்படும் இந்த சாதனையை நாசா விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர்.