செவ்வாய் கிரகத்தில் ‘போர் ஹெல்மெட்’ - பாறை கண்டுபிடிப்பால் அதிர்ச்சி!
செவ்வாய் கிரகத்தில் ‘போர் ஹெல்மெட்’ வடிவில் பாறை கண்டறியப்பட்டுள்ளது.
பெர்சவரன்ஸ் ரோவர்
செவ்வாய் கிரகத்தில் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் (PERSEVERANCE ROVER) ஹெல்மெட் வடிவிலான மர்ம பாறையை கண்டுபிடித்துள்ளது.
எரிமலை கூம்பு போலவும், சிதைந்த போர் ஹெல்மெட் போன்றும் காட்சியளிக்கிறது. செவ்வாய் கிரகத்தில் பண்டைய உயிரினங்களின் தடயங்களைத் தேடி சேகரித்து, அவற்றை பூமிக்கு கொண்டுவரும் பணிகளில் பெர்சவரன்ஸ் ரோவர் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து நாசா, ஹெல்மெட் போன்ற பாறை செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல் வரலாற்றைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவும். ரோவரின் மாஸ்டின் உயரத்தில் அமைந்துள்ள ஒரு ஜோடி கேமராக்களான
போர் ஹெல்மெட்
இடது மாஸ்ட்கேம்-இசட் கேமராவைப் (Left Mastcam-Z camera) பயன்படுத்தி ரோவர் இந்தப் படத்தைப் பெற்றதாக தெரிவித்துள்ளது. இது கிட்டத்தட்ட முழுவதுமாக கோள வடிவத்தில் இருப்பதினால் தனித்துவமானது என்று சொல்ல முடியாது.
வண்டல் இடங்களில் நிலத்தடி நீரால் படிந்த தாதுக்கள் மூலமாகவோ அல்லது எரிமலை வெடிப்புகளுக்குப் பிறகு உருகிய பாறைத் துளிகள் விரைவாக குளிர்ச்சியடைவதன் மூலமாகவோ உருண்டைகளாக உருவாகியிருக்கலாம் என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள
பெர்செவரன்ஸ் குழுவின் செய்தித் தொடர்பாளர் டேவிட் ஆக்லே தெரிவித்தார். மேலும், இந்த பாறை கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல் வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் என்றும் நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.