இறந்துபோன செல்லப்பிராணிகளிடம் பேச வேண்டுமா? இப்படியுமா பண்ணுவாங்க..
செல்லப்பிராணிகளை குறிவைத்து மோசடி அதிகரித்து வருகிறது.
செல்லப்பிராணி உயிரிழப்பு
சீனாவில் செல்லப்பிராணிகள் திடீரென உயிரிழக்கும்போது, அதன் பிரிவில் வாடும் உரிமையாளர்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல் இயங்கி வருகிறது.
இந்த கும்பலை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் இதற்காக பல்வேறு குழுக்களை நடத்தி வருகின்றனர். அதன்மூலம், செல்லப்பிராணிகளை இழந்து வாடும் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு,
இறந்துபோன செல்லப்பிராணிகளின் ஆன்மாவிடம் பேசி 5 கேள்விகள் கேட்க வேண்டுமா? அதற்கு 128 யுவான்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500) செலவாகும் என்று பேசுகின்றனர். மேலும், இறந்துபோன செல்லப்பிராணிகளிடம் 6 மாதங்கள் வரை பேச வேண்டும் என்றால்,
அதிகரிக்கும் மோசடி
அதற்கு 2,999 யுவான்(சுமார் ரூ.36,800), இறந்துபோன செல்லப்பிராணி மறுபிறவி எடுத்துள்ளதா? என்பதை கண்டறிய 1,899 யுவான்(சுமார் ரூ.22,800) வரை வசூல் செய்கின்றனர். இவர்கள் சமூக வலைதளங்களில் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் வெளியிட்ட பதிவுகளை பார்த்துவிட்டு,
அந்த தகவல்களை சேகரித்து.. உரிமையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்றவாறு பதில்களை தயாரித்து, செல்லப்பிராணிகள் பதிலளிப்பது போல் சித்தரிக்கின்றனர்.
இந்த மோசடி வலையில் சிக்கி பலர் பணத்தை இழந்துள்ளனர். ஒருகட்டத்தில் இதனை மோசடி என்று உணர்ந்த சிலர், காவல்துறையினரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.