விண்வெளியில் இனி தண்ணீர்; சிறுநீரிலிருந்து குடிநீர் - ஆய்வில் நாசா வெற்றி!

NASA
By Sumathi Jun 27, 2023 10:02 AM GMT
Report

விண்வெளியில் தண்ணீருக்கான தீர்வுக்காண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

தண்ணீர் தேவை

விண்வெளி வீரர்களின் தண்ணீர் தேவை சுற்றுச் சூழல் கட்டுப்பாடு மற்றும் லைஃப் சப்போர்ட் சிஸ்டம்(ECLSS) முறைப்படி பெறப்பட்டு வருகிறது. இதில், உணவுப் பொருள் காற்று மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெறப்படுகிறது.

விண்வெளியில் இனி தண்ணீர்; சிறுநீரிலிருந்து குடிநீர் - ஆய்வில் நாசா வெற்றி! | Nasa Creates Drinking Water From Urine Space

அதன் வரிசையில், UPA( Urine Processor Assembly) முறைப்படி பயன்படுத்தப்படாத கழிவுகளையும் சுத்திகரிப்பு செய்யும் முயற்சியை நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனை வெற்றி

அதனைத் தொடர்ந்து, விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வை ஆகியவற்றை மறுசுழற்சி மற்றும் சுத்திகரிப்பு செய்து அதில் இருந்து தண்ணீரை பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் இனி தண்ணீர்; சிறுநீரிலிருந்து குடிநீர் - ஆய்வில் நாசா வெற்றி! | Nasa Creates Drinking Water From Urine Space

மேலும், 94 விழுக்காடு சுத்தமான தண்ணீரை பெற்று வந்த நிலையில் தற்போது 98 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்த முயற்சி முழுமையாக வெற்றி அடைந்தால் வரும் காலங்களில் விண்வெளி வீரர்களின் தண்ணீர் தேவையைப் பெறுவதில் பெரிய அளவிலான வெற்றியை பெறலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.