விண்வெளியில் பூத்த முதல் பூ; நாசா வெளியிட்ட புகைப்படம் வைரல் - என்ன பூ தெரியுமா?

NASA Viral Photos
By Sumathi Jun 15, 2023 05:41 AM GMT
Report

முதல் முறையாக விண்வெளியில் பூத்த பூவின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

நாசா

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. மனிதர்கள் பிற கிரங்களுக்கு செல்லும் போது அவர்களுக்கு உதவும் வகையில் சோதனை முயற்சியாக விண்வெளியில் தோட்டம் அமைத்து செடிகள் வளர்க்கப்படுகிறது.

விண்வெளியில் பூத்த முதல் பூ; நாசா வெளியிட்ட புகைப்படம் வைரல் - என்ன பூ தெரியுமா? | Nasa Picture Of Flower Grown In Space Station

இதனால், அவர்களுக்கு தகுந்த ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைப்பது உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் 1970-களில் இருந்து விண்வெளியில் தாவர வளர்ப்பு சார்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் பூ

குறிப்பிட்ட பரிசோதனையை கடந்த 2015-ல் நாசா விண்வெளி வீரர் கேஜெல் லிண்ட்கிரென் இதனை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடங்கினார். அதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி தோட்டத்தில் இந்த ஜின்னியா மலர் வளர்விக்கப்பட்டது.

விண்வெளியில் பூத்த முதல் பூ; நாசா வெளியிட்ட புகைப்படம் வைரல் - என்ன பூ தெரியுமா? | Nasa Picture Of Flower Grown In Space Station

இப்பூவின் புகைப்படத்தை நாசா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. இது வெறும் காட்சிக்கானது அல்ல. விண்வெளியில் தாவரங்களின் வளர்ச்சி குறித்து புரிதல் கிடைக்கிறது என நாசா தெரிவித்துள்ளது.