விண்வெளியில் கிறிஸ்துமஸ்; அப்போ எல்லாமே நாடகமா? சர்ச்சைக்கு நாசா விளக்கம்

Christmas Viral Video NASA Sunita Williams International Space Station
By Karthikraja Dec 25, 2024 03:41 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

8 நாள் பயணத்திற்கு திட்டமிட்டு கிளம்பிய சுனிதா வில்லியம்ஸிடம் கிறிஸ்துமஸ் தொப்பி எப்படி கிடைத்தது என சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியினரான சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் விண்வெளி நிலையம் சென்றார். 

sunita williams in space latest photo

8 நாட்கள் அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டு கிளம்பிய நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

கிறிஸ்துமஸ் கொண்டாடினால் சிறை - எந்த நாடுகளில் தெரியுமா?

கிறிஸ்துமஸ் கொண்டாடினால் சிறை - எந்த நாடுகளில் தெரியுமா?

விண்வெளியில் கிறிஸ்துமஸ்

இதன் காரணமாக 6 மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள அவர், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதமே பூமிக்கு திரும்புவார் என தகவல் வெளியானது. 

இந்நிலையில் இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடும் வீடியோவை அமெரிக்க விண்வெளி மையமான நாசா வெளியிட்டுள்ளது.

நாசா விளக்கம்

8 நாள் பயணமாக சுனிதா வில்லியம்ஸ் எப்படி கிறிஸ்துமஸ் தொப்பிகள் கொண்டு போனார்? இவ்வளவு நாட்கள் அங்கு அவர் தங்குவார் என முன்னரே தெரியுமா? அப்படியானால் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு என்பது நாடகமா? அல்லது வேறு யாரேனும் இதனை கொண்டு சென்று கொடுத்தனரா என பலரும் சந்தேகங்களை எழுப்பினர். 

sunita williams christmas 2024 in space

இது குறித்து விளக்கமளித்துள்ள நாசா, கடந்த நவம்பர் மாதம், 3 டன் எடை கொண்ட ஸ்பெஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் சில அறிவியல் ஆய்வுக்கான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் கிறிஸ்துமஸ் தொப்பி, கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள், வான்கோழி, உருளைக்கிழங்கு, காய்கறிகள், மற்றும் குக்கீஸ் உள்ளிட்ட உணவுகள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.