நிலவில் இருந்தபடியே 'பூமி உதயம்' படமெடுத்த பிரபல விஞ்ஞானி விமான விபத்தில் உயிரிழப்பு
நிலவில் இருந்தபடியே படமெடுத்த பிரபல நாசா விஞ்ஞானி பில் ஆண்டர்ஸ் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அப்பல்லோ-8
1968 ம் ஆண்டு நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களுடன் நாசா அனுப்பிய அப்பல்லோ-8 விண்கலத்தில் பில் ஆண்டர்ஸும் பயணித்தார். முதல் முறையாக சந்திரனின் மேற்பரப்பில் பத்து சுற்றுகளை தரையிறங்காமல் சுற்றி முடித்தது இந்த ஆய்வுக்கலம்.
நிலவின் மீது அந்த ஆய்வுக் கலம் பறந்துகொண்டிருந்தபோது, அதன் மேற்பரப்பிலிருந்து பூமி உதயமானதை வில்லியம் ஆண்டர்ஸ் படமெடுத்தார். விண்வெளியில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் அந்தப் படமும் ஒன்றாக அமைந்தது. மேலும் இந்த புகைப்படம் லைஃப் இதழின் "உலகத்தை மாற்றிய 100 புகைப்படங்கள்" இல் இடம்பெற்றது.
பில் ஆண்டர்ஸ்
தற்போது 90 வயதாகும் அவர், வாஷிங்டன் மாகாணத்தையொட்டி கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
விண்வெளி வீரராக தனது புகழ்பெற்ற வாழ்க்கைக்குப் பிறகு, ஆண்டர்ஸ் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முதல் தலைவராகவும் நார்வேக்கான அமெரிக்க தூதராகவும் பணியாற்றுவது உட்பட பல குறிப்பிடத்தக்க அரசு பதவிகளை வகித்தார்.
1990 களின் முற்பகுதியில், அவர் ஓய்வுபெறும் முன் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனமான ஜெனரல் டைனமிக்ஸை CEO மற்றும் தலைவராக வழிநடத்தினார்.