மீண்டும் நிலவில் மனிதர்கள்; நாசாவின் புதிய திட்டங்களுக்கு தலைவரான இந்திய விஞ்ஞானி!

United States of America NASA World
By Jiyath Sep 10, 2023 12:52 PM GMT
Report

நாசாவின் புதிய திட்டங்களுக்கு தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி நியமிக்கப்பட்டுள்ளார். 

புதிய திட்டத்தின் தலைவர்

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஏற்கனவே அப்பல்லோ 11 என்ற திட்டத்தின் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. இதனால் நிலவில் கால் வைத்த முதல் மனிதன் என்ற பெருமையை நீல் ஆம்ஸ்ட்ராங் பெற்றார்.

மீண்டும் நிலவில் மனிதர்கள்; நாசாவின் புதிய திட்டங்களுக்கு தலைவரான இந்திய விஞ்ஞானி! | Indian Origin Scientist Who Heads Nasa New Project

அந்த வகையில் மீண்டும் நிலவில் நீண்ட காலம் மனிதர்கள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தையும், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் செயல்படுத்துவது குறித்து நாசா ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த திட்டங்களுக்கான தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷாக்ட்ரியா என்ற விஞ்ஞானி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது திட்டத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வெற்றிகரமாக கால் பதித்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாக்ட்ரியா

மென்பொருள் பொறியாளராகவும், ரோபாட்டிக் பொறியாளராகவும் பணியாற்றிய ஷாக்ட்ரியா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கான விண்கல ஆப்பரேட்டராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

மீண்டும் நிலவில் மனிதர்கள்; நாசாவின் புதிய திட்டங்களுக்கு தலைவரான இந்திய விஞ்ஞானி! | Indian Origin Scientist Who Heads Nasa New Project

நிலவில் துணிச்சலாக பல ஆய்வுகளை நடத்தவும், செவ்வாய் கிரகத்தில் முதல் முறையாக மனிதர்களை கால் பதிக்க வைக்கவும் இந்த திட்டம் உதவும் என்றும் இந்த திட்டத்துக்கான தலைவராக ஷாக்ட்ரியா நியமிக்கப்பட்டுள்ளார்' என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.