என் நண்பர் ஷின்சோ அபே மீதான தாக்குதல் எனக்கு மிகுந்த வேதனையை கொடுக்கிறது - பிரதமர் மோடி உருக்கம்

Shinzo Abe Narendra Modi
By Nandhini Jul 08, 2022 07:52 AM GMT
Report

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் அவர் பலத்த காயமடைந்தார். நரா நகரில் நடந்த இச்சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அபேவின் மார்பில் 2 குண்டுகள் வரை பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஷின்சோ அபே நரா நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. 67 வயதான அபே வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

பிரதமர் உருக்கமான பதிவு 

இந்நிலையில், ஷின்சோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல் எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், எனது அருமை நண்பர் ஷின்சோ அபே மீதான தாக்குதல் மிகவும் வேதனை அளிக்கிறது. நம் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் அவருடனும், அவரது குடும்பத்தினருடனும், ஜப்பான் மக்களுடனும் உள்ளன என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.      

Narendra Modi - twit

ஷாரூக்கானையே மிஞ்சுடுவான் போல... - இணைத்தை கலக்கும் 3 வயது குழந்தையின் க்யூட் நடனம்