பைடனை பின்னுக்கு தள்ளிய மோடி - உலக தலைவர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம்
உலகளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
பிரபலமான தலைவர்கள்
மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலக அளவில் பிரபலமான தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஒரு வார காலம் நடத்தியுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு, ஒவ்வொரு நாட்டிலும் வயது வந்த குடிமக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு நாட்டின் மாதிரி அளவும் வேறுபடுகிறது. என மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நரேந்திர மோடி
இதில் 69% பேரின் ஆதரவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 61% ஆதரவை பெற்று இரண்டாவது இடத்தையும், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே 60% ஆதரவை பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 39% ஆதரவும், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மருக்கு 45% ஆதரவும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு 20% ஆதரவுமே கிடைத்துள்ளது.