ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுகளில் மூவர்ண கொடியை பறக்க விடுங்கள் - பிரதமர் வேண்டுகோள்

Narendra Modi
By Nandhini Jul 22, 2022 08:49 AM GMT
Report

சுதந்திர தின விழா

இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் ‘சுதந்திர தின அமுதப் பெருவிழா' (அம்ரித் மஹோத்சவ்) என்ற பெயரில் பல்வேறு செயல்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் வேண்டுகோள்

இந்நிலையில், சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடு தோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த ஆண்டு, ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாடும் போது, ​​ஹர் கர் திரங்கா இயக்கத்தை வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மூவர்ணக் கொடியை ஏற்றவும் அல்லது உங்கள் வீடுகளில் காட்சிப்படுத்தவும். இந்த இயக்கம் தேசியக் கொடியுடனான நமது தொடர்பை ஆழப்படுத்தும் என்று பதிவிட்டுள்ளார்.     

Narendra Modi