முதலமைச்சரின் உடல் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
முதலமைச்சருக்கு கொரோனா
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் வீட்டிலேயே 2 நாட்களாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இந்த சூழலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர்
முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை , கண்காணிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சரிடம் பிரதமர் மோடி தொலை பேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார், காவேரி மருத்துவனையில் முதலமைச்சரின் சிகிச்சை பற்றியும் பிரதமர் மோடி கேட்டறிந்தர்