பிரதமர் மோடியின் தோளை தட்டி கூப்பிட்ட அமெரிக்க அதிபர் - வைரலாகும் வீடியோ

Narendra Modi
By Nandhini Jun 28, 2022 06:42 AM GMT
Report

ஜெர்மனியில் 'ஜி7' நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது.

'ஜி7' மாநாடு 

இந்த ஜி7 மாநாட்டில் பங்கேற்க இந்தியா, இந்தோனேஷியா, செனகல், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளை ஜெர்மனி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

'ஜி7' மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஜெர்மனி சென்றடைந்தார். ஜெர்மனி விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநாட்டில் ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவு பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும், இந்த மாநாட்டிற்கு பிறகு ஐரோப்பாவில் உள்ள இந்திய சமூகத்தினரையும் பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோளை தட்டி கூப்பிட்ட ஜோ பைடன் 

Narendra Modi

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் இது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இந்திய பிரதமர் மோடி, கனடா பிரதமருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பின்னால் இருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மோடியைப் பார்த்ததும் நடந்து வந்து பேசிக்கொண்டிருந்த பிரதமர் மோடியின் தோளை தட்டினார். உடனே பிரதமர் மோடி திரும்பி அவருக்கு கைக் குலுக்கி, மகிழ்ச்சியுடன் தன்னுடைய மரியாதையை வெளிப்படுத்தினார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.