அம்பானி இல்ல திருமண விழா - நேரில் சென்று ஆசிர்வதித்த பிரதமர் மோடி
ஆனந்த் அம்பானி திருமணத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அம்பானி இல்ல திருமணம்
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழா மும்பையில் அமைந்துள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நேற்று முன்தினம் ( 12.07.2024) நடைபெற்றது.
இதில் சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல்வாதிகள், பிரபல தொழிலதிபர்கள் என உலகம் முழுவதும் இருந்து பல விவிஐபிகள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்வான ‘ஷுப் ஆசிர்வாத்’ நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், துறை சார்ந்த பிரபலங்கள் பங்கேற்றனர்.
நரேந்திர மோடி
இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார். பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் வணங்கினர். பதிலுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்தார்.
Grand Ambani wedding pm Modi sir is giving blessings #AmbaniFamilyWedding pic.twitter.com/qmt3bvi3JQ
— Dr Gautam Bhansali (@bhansaligautam1) July 13, 2024
அருகில் இருந்த இருந்த ஆனந்த் அம்பானியின் பெற்றோர் முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி, ராதிகா மெர்சண்டின் பெற்றோர் ஆகியோரிடமும் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.