அம்பானி திருமண விழாவில் குவிந்த பிரபலங்கள் லிஸ்ட் - இவங்க மட்டும் தான் மிஸ்ஸிங்
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.
ஆனந்த் அம்பானி திருமணம்
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழா மும்பையில் அமைந்துள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு உலகம் முழுவதும் இருந்து சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல்வாதிகள், பிரபல தொழிலதிபர்கள் என பல விவிஐபிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மனைவி லதா மற்றும் மகள் சௌந்தர்யா குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் அட்லி, பிரியா அட்லீ, சூர்யா, ஜோதிகா, நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட்
கிரிக்கெட் உலகில் இருந்து மகேந்திர சிங் தோணி, கவுதம் கம்பீர், ஜாகிர் கான், ஸ்ரீகாந்த், ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், , சூர்யா குமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, யுவேந்திர சகல், இசான் கிசான், குருணால் பாண்டியா, அஜின்கியா ரகானே, டுவைன் பிராவோ, சாம் கரன், க்ரீம் ஸ்மித், மஹேல ஜயவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாலிவுட் திரையுலகில் இருந்து அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஷாஹித் கபூர், பிரியங்கா சோப்ரா, அர்ஜுன் கபூர், ஹ்ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் பச்சன், சல்மான் கான் ரன்பீர் கபூர், கத்ரீனா கைப், சித்தார்த் மல்ஹோத்ரா, கியரா அத்வானி, ராம் சரண், கரண் ஜோகர், அனன்யா பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசியல் தலைவர்கள்
மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார், பிரபுல் படேல், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரே சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஸ்ம்ரிதி ராணி, ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், ஹாலிவுட் பிரபலங்களான கிம் கர்தாஷியன், க்ளோ கர்தாஷியன், மல்யுத்த வீரரான ஜான் சீனா, இங்கிலாந்து முன்னாள் பிரதமர்கள் டோனி பிளேயர், போரிஸ் ஜான்சன், அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மகள் இவங்கா ட்ரம்ப், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், சவூதி அராம்கோ நிறுவனத்தின் சிஇஓ அமின் நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலந்து கொள்ளாதவர்கள்
பிரபல கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இருவரும் தற்போது லண்டனில் உள்ளனர். ரோஹித் சர்மா லண்டனில் நடைபெற்று வரும் விம்பிளிண்டன் டென்னிஸ் போட்டியை காண சென்றுள்ளார். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான அமீர் கான், கங்கனா ரணாவத், சைப் அலி கான், சோனாக்ஸி சின்ஹா, ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
பாலிவுட் நடிகரான அக்சய் குமார் கோவிட் தொற்று காரணமாக கலந்து கொள்ளவில்லை.
திருமண விழா 14 ம் தேதி வரை நடைபெற உள்ளது. 14 ம் தேதி அன்று திருமண வரவேற்பு நடைபெற உள்ளதால் இதில் பல நாடுகளின் முன்னாள் அதிபர்கள், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.