அண்ணாமலை வளர்ச்சிய பாத்து திமுக பயப்படுகிறது...கொந்தளித்த பாஜக தலைவர்!!

Tamil nadu BJP K. Annamalai
By Karthick Oct 21, 2023 03:55 AM GMT
Report

பனையூரில் பாஜகவின் கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை பாஜகவின் மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி எக்ஸ் தளத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

கொடி கம்பம் அகற்றம்

சென்னை பனையூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகில் 50 அடி உயரம் கொண்ட பாஜகவின் கொடி கம்பம் அமைந்துள்ளது. இந்த கொடிக்கம்பத்திற்கு எதிராக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. நெடுஞ்சாலை துறையிடம் முறையாக அனுமதி பெறாமல் இந்த கொடி கம்பம் அமைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த கொடிக்கம்பம் நேற்றிரவு அகற்றப்பட்டுள்ளது.

narayanantirupathi-slams-dmk-in-removing-flag-post

இதனை கடுமையாக கண்டித்து தமிழக பாஜகவின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நேற்று இரவு முதல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தின் முன் இருந்த கொடி கம்பத்தை அகற்ற காவல் துறையினர் காட்டிய மும்முரம் வியப்பளிக்கிறது. இரவோடு இரவாக இதை தட்டி கேட்ட பாஜகவினர் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தொடங்கும் வடகிழக்கு பருவம்; வெளுத்து வாங்கப்போகும் கனமழை - கவனம்!

தொடங்கும் வடகிழக்கு பருவம்; வெளுத்து வாங்கப்போகும் கனமழை - கவனம்!

திமுக அஞ்சுகிறது

சட்ட ஒழுங்கு சீர்கேடு, செயின் பறிப்பு, திருட்டு, போக்குவரத்து விதி மீறல்கள் என சென்னை மாநகரமே திக்கு முக்காடி கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு கொடி கம்பத்தை அகற்ற நூற்றுக்கணக்கான போலீசாரை ஏவி பாஜக தொண்டர்களை தாக்கி, காயப்படுத்தி அவர்களை கைது செய்து சிறையிலடைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இரவோடு இரவாக இந்த நடவடிக்கை என்பது பாஜகவின் வளர்ச்சியை கண்டு தி மு க அஞ்சுகிறது என்பதையும், அண்ணாமலை அவர்களின் ஆளுமையை, அவரின் துணிவான அரசியலை கண்டு திமுக கலங்கி போயுள்ளதையுமே உணர்த்துகிறது.

narayanantirupathi-slams-dmk-in-removing-flag-post

ஃபாஸிஸ திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள். உடனடியாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.