சவுக்கு சங்கரை கைது பண்ணிங்க.. அப்போ பிரகாஷ் ராஜ்? நாராயணன் திருப்பதி காட்டம்!
பிரகாஷ் ராஜை காவல்துறை கைது செய்யுமா என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு 'அம்பேத்கர் சுடர்' விருது வழங்கப்பட்டது.
அப்போது மேடையில் பேசிய பிரகாஷ் ராஜ், ”பிரதமர் மோடி ஒரு பாசிஸ்ட், சர்வாதிகாரி, அவர் தேரில்தான் நிற்பார், விமானத்தில் தான் வருவார், மக்கள் பக்கத்தில் நிற்க மாட்டார், மக்களின் ஸ்பரிசம் தெரியாதவர், மக்களின் வியர்வையை தொடாதவர், மக்களின் பசியை அறியாதவர்.
நாராயணன் திருப்பதி கேள்வி
அவர் தெய்வமகன் கிடையாது டெஸ்ட் டியூப் பேபி" என கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் தளத்தில், " முதலமைச்சரை அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசியது தவறு தான் என்று சொன்ன நீதிபதி,
பிரதமரை அவன், இவன் என்று பேசிய பிரகாஷ் ராஜ் மீது நடவடிக்கை எடுப்பாரா? ஒருமையில் யாரையும் பேசுவதற்கு சவுக்கு சங்கருக்கும் உரிமையில்லை, பிரகாஷ் ராஜுக்கும் உரிமையில்லை. சட்டப்படி தவறு தான்.
சவுக்கு சங்கரை கைது செய்த காவல்துறை, பிரகாஷ்ராஜை கைது செய்யுமா? முதல்வருக்கு மரியாதை? பிரதமருக்கு அவமரியாதையா?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.