திமுகவை சேர்ந்த அந்த அற்ப பதர் - சிறிதளவாவது மனசாட்சி இருக்கா? சீறும் நாராயணன் திருப்பதி!!
திமுகவை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி குறித்து பாஜகவின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அற்ப பதர்..
அப்பதிவில், மீண்டும் தி மு க வை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்கிற அற்ப பதர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை அருவருக்கத்தக்க வகையில் தரக்குறைவாக பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும், உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களை ஒருமையில் பேசுவது, இந்த நபரை தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் ஆபாசமாக, அதாவது திராவிட மாடலாக பேசுவதற்கு தி மு க தான் தூண்டி விடுகிறது என்பது உறுதியாகிறது.
இது போன்ற கேவலங்களுக்கு தி மு க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். அநாகரீக, ஆபாச, அருவருக்கத்தக்க, கேவல, கண்டிக்கத்தக்க அரசியலின் இருப்பிடம் தி மு க தான் என்பதற்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை விட வேறு ஆதாரம் தேவையில்லை.
மீண்டும் தி மு க வை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்கிற அற்ப பதர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை அருவருக்கத்தக்க வகையில் தரக்குறைவாக பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களை ஒருமையில் பேசுவது, இந்த நபரை தொடர்ந்து…
— Narayanan Thirupathy (@narayanantbjp) June 15, 2024
சிறிதளவேனும் மனசாட்சி இருந்தால், பொறுப்பு இருந்தால், கீழ்த்தரமான அரசியலை தி மு க முன்னெடுப்பதற்கு, மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
திமுகவை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது பேச்சுக்களின் காரணமாக, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். அவர் மீது பலரும் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.
சர்ச்சை கருத்து காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டார். அண்மையில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒரு தெருமுனை கூட்டத்தில் பாஜகவை சேர்ந்த ராதிகா சரத்குமாரை குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
ராதிகா சரத்குமார் அவர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் குஷ்பூவும் அவர் மீது கடுமையான விமர்சனத்தை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.