சர்க்கஸில் கோமாளி போல அரசியலில் சீமான் - விளாசிய பாஜக
தமிழக அரசியல்வாதிகளின் பொழுது போக்கே சீமான் தான் என தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
நாராயணன் திருப்பதி பதிவு
சீமானை விமர்சித்து நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில்,
"என் கட்சியை விட பாஜக அதிக ஓட்டு பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விடுகிறேன் " : சீமான்.
"என் கட்சியை விட பாஜக அதிக ஓட்டு பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விடுகிறேன் " : சீமான்.
— Narayanan Thirupathy (மோடியின் குடும்பம்) (@narayanantbjp) May 27, 2024
சர்க்கஸில் கோமாளிகள் போல, திரைப்படங்களில் காமெடியன்கள் போல, அரசியலில் சீமான் அவர்கள். சீரியஸான சூழ்நிலை உள்ள போது சீமான் பேச்சை கேட்டால் டென்க்ஷன் காணாமல் போகும். தமிழக அரசியல்வாதிகளின்…
சர்க்கஸில் கோமாளிகள் போல, திரைப்படங்களில் காமெடியன்கள் போல, அரசியலில் சீமான் அவர்கள். சீரியஸான சூழ்நிலை உள்ள போது சீமான் பேச்சை கேட்டால் டென்க்ஷன் காணாமல் போகும். தமிழக அரசியல்வாதிகளின் பொழுது போக்கே சீமான் தான்.
முடிவை சீமான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விமர்சனம் செய்துள்ளார்.
சீமான் சவால்
சில தினங்கள் முன்பு செய்தியாளர்களை சந்தித்த போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பேசும் பொது, நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் கூட்டணி இல்லாமல், தனித்து பாஜக கட்சி தமிழகத்தில் தங்கள் கட்சியை விட வாக்கு வாங்கினால் தான் கட்சியை கலைத்து விடுகிறேன் என அதிரடியாக சவால் விடுத்திருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
மேலும், அப்போது ஏப்ரல் 19-ஆம் தேதிக்கு முன்னர் தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரித்து மோடி பேசியிருக்க வேண்டியதுதானே? என்ற கேள்வியை வினவி, சிலந்தி ஆற்றில் கட்டப்படும் அணை பணிகளை உடனே நிறுத்தபட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.