நா.த.க விட பாஜக வாக்கு வாங்கட்டும் - கட்சியை கலைத்து விடுகிறேன் - சீமான் சவால்

Naam tamilar kachchi BJP K. Annamalai Seeman
By Karthick May 24, 2024 08:36 AM GMT
Report

வெளிவரவிருக்கும் நாடாளுமன்ற முடிவுகளில் பாஜக தங்களை விட வாக்குகளை பெற்றால் தான் கட்சியை கலைத்து விடுகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் சி.பா.ஆதித்தனாரின் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

if bjp gets more vote will dispose party seeman

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, கோரமண்டல் ஆலை குறித்து பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு ஏமாற்றமப்பதாக கூறி, அந்த ஆலையை திறக்க தமிழ்நாடு அரசு உத்திரவிடக் கூடாது என வலியுறுத்தினார்.

ஈழ விடுதலைக்கு அமெரிக்கா தீர்மானம் - இந்தியா ஆதரவளிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

ஈழ விடுதலைக்கு அமெரிக்கா தீர்மானம் - இந்தியா ஆதரவளிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

தொடர்ந்து பேசிய அவர், ஏப்ரல் 19-ஆம் தேதிக்கு முன்னர் தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரித்து மோடி பேசியிருக்க வேண்டியதுதானே? என்ற கேள்வியை வினவி, சிலந்தி ஆற்றில் கட்டப்படும் அணை பணிகளை உடனே நிறுத்தபட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அப்போது அவரிடம், பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக தென்மாநிலங்களில் வளர்ந்து வருகிறது என அண்ணாமலை நம்புகிறாரே என்ற கேள்வி கேட்கப்பட்டது.

if bjp gets more vote will dispose party seeman

அதற்கு பதிலளித்த சீமான், தனித்து நிற்க பாஜகவிற்கு முன்னர் துணிவு இருக்கா? என ஆவேசமாக வினவி, ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு தனித்து அக்கட்சி பெரும் வாக்குகள் குறித்து தெரிந்துவிடும் என்றார். மேலும், கூட்டணியாக இல்லாமல் தனித்த பாஜகவின் வாக்கு சதவீதம் நாம் தமிழர் கட்சியைவிட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன் ஆவேசமாக சவால் விட்டுள்ளார்.