இல்லற வாழ்கையில் ஈடுபட முடியுமா? அக்ஷயாவுக்கு எல்லாம் தெரியும் - மருத்துவர் கூறும் விளக்கம்!
நெப்போலியன் மகன் குறித்த சர்ச்சை வதந்திக்கு மருத்துவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இல்லற வாழ்கை..
நெப்போலியன் 1990களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். மலையாளம், தெலுங்கு சினிமாக்களிலும் வில்லனாக அசத்தியுள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்தமகன் தனுஷுக்கு தசை சிதைவு எனும் அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவரால் நடக்க முடியாது.
எனவே, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன் குடும்பத்துடன் அங்கேயே செட்டிலானார். அண்மையில் மகன் தனுஷூக்கு அக்ஷயா என்கிற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இவர்களின் திருமணத்தை கோலாகலமாக நடத்த ஆசைப்பட்ட நெப்போலியன், திருமணத்தை ஜப்பானில் நடத்த உள்ளார். இதற்கான வேலையில் நெப்போலியன் மும்முரமாக செய்து வருகிறார்.
இந்த சூழலில், நெப்போலியனின் மகனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது, அவருக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றெல்லாம் பல செய்தி இணையத்தில் வெளியாகி வருகிறது.
மருத்துவர் விளக்கம்
இதுகுறித்து நெப்போலியன் கட்டியுள்ள மயோபதி மருத்துவமனையின் மருத்துவர் டேனியல் விளக்கமளித்துள்ளார், நெப்போலியன் மகனுக்கு திருமணம் செய்ய இருப்பது குறித்து மருத்துவரின் உரிய ஆலோசனை செய்தார். அதன் பின் தான் தனுஷுக்கு பெண் பார்க்கப்பட்டது.
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களால் திருமணம் செய்ய முடியாது, இல்லறை ஈடுபட முடியாது என்பது உண்மை அல்ல. சிலர் திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
தனுஷூக்கு சிறு வயதிலேயே இந்த நோய் கண்டு பிடிக்கப்பட்டால், அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சை காலத்தை பொறுத்தே இந்த நோயின் தன்மை இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனை பெற்றுத்தான் திருமண ஏற்பாடு நடந்தது,
தனஷூம் அக்ஷயாவும் ஒருவரை ஒருவர் போனில் பரஸ்பரமாக பேசிசித்தான் இந்த திருமண முடிவை எடுத்தார்கள், அந்த பெண்ணுக்கு இந்த நோய் குறித்தும், தனுஷ் குறித்தும் முழுமையாக தெரியும் என்று தெரிவித்துள்ளார்.