தனுசுக்கு இன்னொரு திருமணம் செய்வோம் - நெப்போலியன் சொன்ன தகவல்
தனுசுக்கு இன்னொரு முறை திருமணம் செய்ய உள்ளதாக நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
நெப்போலியன்
பிரபல நடிகரும் முன்னாள் மத்தியமைச்சருமான நெப்போலியன் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.
நெப்போலியன் ஜெயசுதா தம்பதியின் மூத்த மகன் தனுஷின் திருமணம் கடந்த 07.11.2024 அன்று ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கார்த்தி, சரத்குமார், மீனா, குஷ்பூ, ராதிகா, என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர்.
தனுஷ் திருமணம்
மணமகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் உள்ளார். இதனால் பலரும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி பணயம் வைக்கிறார்களே, பணமிருந்தால் எல்லாம் சாத்தியமே என இந்த திருமணம் குறித்து விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத நெப்போலியன் தனது மகனின் ஆசைக்காக பல கோடி செலவில் ஜப்பானில் திருமணத்தை நடத்தியுள்ளார். மணப்பெண் அக்சயா திருநெல்வேலியை சேர்ந்த செவிலியர் ஆவார். அக்சயா எங்கள் குடும்பத்தின் குலசாமி என திருமண மேடையிலே உருக்கமாக பேசினார் நெப்போலியன்.
மேலும், திருமண முடிந்தாலும் இன்னும் 2 மாதங்கள் ஜப்பானில் இருக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஜனவரி மாதம் அமெரிக்கா சென்று அங்கு அந்த நாட்டின் சட்டதிட்டபடி தனுஷ் - அக்ஷயாவுக்கு இன்னொரு திருமணம் பண்ண உள்ளதாகவும் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.