என்னை ஏமாற்றி நாஞ்சில் விஜயன் கல்யாணம் பண்ணிட்டாரு - மனைவி பகீர்!
என்னை ஏமாற்றிதான் திருமணம் செய்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் விஜயன்
விஜய் டிவி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் அது இது எது, கலக்க போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டதன் மூலம் அறியப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு சூர்யாதேவியை அவதூறாக பேசி மிரட்டி தாக்கியதாக கூறப்பட்ட புகாரில் 2022 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸார் நாஞ்சில் விஜயனை கைது செய்தனர்.
இந்நிலையில், இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் திருமணம் நடந்தது. தனது நண்பர்கள் மூலம் அறிமுகமான மரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது, விஜயனும் மரியாவும் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
மனைவி பேட்டி
அதில் மரியா, இவர் என்னை ஏமாற்றிதான் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்தின்போது எங்களிடம் அவரது வயதையே சொல்லவில்லை. ஆனால் இவருக்கு இப்போ அங்கிள் வயசு இருக்கும்.
என்னை பெண் பார்க்க வந்த போது கூட இவர் தலை, மீசை, எல்லாம் வெள்ளையாகவே இருந்தது. கல்யாணத்திற்கு பிறகு ஒரு நாள் இவருக்கு எண்ணெய் தேய்த்து விட்டேன். அப்போதுதான் சாயம் வெளுத்தது. தலை பூரா வெள்ளை முடிதான்.
அதற்கு நாஞ்சில் நான் ஏமாற்றி எல்லாம் கல்யாணம் செய்யலை. என்னோட வயசையும் நான் மறைக்கவில்லை, இந்த வெள்ளை முடிக்கு மட்டும்தான் டை அடித்துவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.