CWC ; நான் விலகுகிறேன்...இனி இவங்க கூடலாம் பண்ண மாட்டேன் - கொதித்த நாஞ்சில் விஜயன்!

Star Vijay Cooku with Comali
By Swetha May 06, 2024 04:54 AM GMT
Report

 குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நாஞ்சில் விஜயன் விலகுகிறார்.

விலகுகிறேன் 

விஜய் டிவியின் மெகா ஹிட் ரியாலிட்டி ஷோ ஆன குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் நேற்று முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் பட்டி தொட்டி எங்கும் பரவி வேறலெவல் ஹிட் அடித்தது.காமெடி கலந்த கலகலப்பான குக்கிங் நிகழ்ச்சி என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

CWC ; நான் விலகுகிறேன்...இனி இவங்க கூடலாம் பண்ண மாட்டேன் - கொதித்த நாஞ்சில் விஜயன்! | Nanjil Vijayan Leaves Cook With Comali

இந்த நிகழ்ச்சியால் பலர் தங்களது வாழ்வின் கவலைகளை மறந்து சிரிக்க வைப்பதால் மக்கள் இதற்கு "ஸ்ட்ரெஸ் பஸ்டர்" என்று பெயர் வைத்து அழைப்பதுண்டு. இந்த நிகழ்ச்சிக்கு தூணாக திகழ்ந்து வந்தது அதன் நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் தான். அவர்கள் காம்போவுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

CWC வெங்கடேஷ் பட் உடன் சன் டிவிக்கு தாவிய கோமாளிகள்; புது குக்கிங் ஷோ - இதுதான் காரணம்?

CWC வெங்கடேஷ் பட் உடன் சன் டிவிக்கு தாவிய கோமாளிகள்; புது குக்கிங் ஷோ - இதுதான் காரணம்?

நாஞ்சில் விஜயன்

வெற்றிகரமாக நான்கு சீசன்கள் அதே டீம் உடன் பயணித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த ஆண்டு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அந்நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேன்சன்ஸ் நிறுவனம் வெளியேறியது. அதற்கு பதிலாக தற்போது ஐந்தாவது சீசனை இந்த ஆண்டு பாக்ஸ் ஆஃபிஸ் என்ற நிறுவனம்  தயாரித்து வருகிறது.

CWC ; நான் விலகுகிறேன்...இனி இவங்க கூடலாம் பண்ண மாட்டேன் - கொதித்த நாஞ்சில் விஜயன்! | Nanjil Vijayan Leaves Cook With Comali

இந்த சூழலில், புது சீனின் போட்டியாளராக வந்த நாஞ்சில் விஜயன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தனது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், விஜய் டிவிக்கு தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பாக்ஸ் ஆபிஸ் தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் தான் கலந்துகொள்ள மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பதிவிட்டு பின் அந்த பதிவை நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.