உடம்ப அசைக்க கூட முடியல.. அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை

Nandita Swetha
By Sumathi Jul 21, 2023 06:27 AM GMT
Report

நடிகை நந்திதா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை நந்திதா 

‘அட்டக்கத்தி’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. இவருடைய எதார்த்த நடிப்பில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது. ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, முண்டாசுப்பட்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார்.

உடம்ப அசைக்க கூட முடியல.. அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை | Nandita Swetha Affected By Rare Disease

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்களே இருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்கள், வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

அரிய வகை நோய்

இந்நிலையில், தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹிடிம்பா' என்ற பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். அதில், "20 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களின் மக்கள் தொகையில் சுமார் 2 சதவீதத்தை பாதிக்கும் பைப்ரோமியால்ஜியா என்ற தசை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

உடம்ப அசைக்க கூட முடியல.. அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை | Nandita Swetha Affected By Rare Disease

ஒரு சிறிய வேலை செய்தால் கூட அது என் தசைகளில் பிரச்சனை ஏற்படுத்தும். இது சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாட்டை உருவாக்கும். உடலை அசைப்பதற்குக் கூட கடினமாக இருக்கும். இதையெல்லாம் தாண்டி தான் ஹிடிம்பா படத்திற்காக உடல் எடையைக் குறைத்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.