பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம் : கண்ணீருடன் வெளியிட்ட பதிவு!
பிரபல திரைப்பட நடிகை நந்திதா ஸ்வேதா. இவரின் தந்தை உயிரிழந்துள்ள செய்தியால் தமிழ் திரை உலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. ‘அட்டக்கத்தி’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா.
இவர் பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்களே இருந்தது.
இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என்று மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், நேற்று இரவு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தன்னுடைய தந்தை சிவசாமி 54 வயதில் உயிரிழந்து விட்டதாகவும், அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
This is to inform all my wellwishers that My father Mr.shivaswamy aged 54 passed away today. May his soul rest in peace
— Nanditaswetha (@Nanditasweta) September 19, 2021