நான் முதல்வன் திட்டம்.. 60 செகண்ட் இன்ஸ்டா ரீல்ஸ் போதும் - மாணவர்களுக்கு செம்ம வாய்ப்பு!
ரீல்ஸ் வெளியிட்டு மாணவர்களுக்கு பரிசுகளை வெல்லும் வாய்ப்பை நான் முதல்வன் திட்டம் ஏற்படுத்தியுள்ளது.
நான் முதல்வன்
கடந்த 2022ம் ஆண்டு தமிழக கல்வித்துறையால் ”நான் முதல்வன்” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் வடிவமைக்க வழிகாட்டுதல்களும், பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், மாணவர்களின் சமூக வலைதள பங்களிப்பை ஆக்கப்பூர்வமாக மாற்றும் வகையில் ரீல்ஸ் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நான் முதல்வன் திட்டம் சார்ந்து ரீல்ஸ் உருவாக்கி வெளியிட வேண்டும்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிகையில்,
இன்ஸ்டா ரீல்ஸ்
தீம் - 30 முதல் 60 செகண்ட் கொண்டதாக இருக்க வேண்டும். நான் முதல்வன் திட்டம் சார்ந்த தகவலாக அமைய வேண்டும்.
கன்டென்ட் - எதையும் காப்பி அடிக்காமல் தனித்துவமான படைப்பாக இருக்க வேண்டும். அதேசமயம் சர்ச்சைக்குரிய வகையிலோ, மற்றவர்கள் மனம் புண்படும் வகையிலோ இருக்கக் கூடாது. தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்ப இருப்பது கூடுதல் சிறப்பு.
சப்மிஷன் - socialmedia@naanmudhalvan.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கடைசி நாள் டிசம்பர் 1, 2024. இரவு 11.59 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
🎥 Unleash Your Creativity! Join the Naan Mudhalvan Reels Contest 2024! Show off your skills by creating a unique 30-60 second reel inspired by the Naan Mudhalvan Anthem. Top entries will be featured on our official Instagram page, and winners receive appreciation certificates. pic.twitter.com/QggxowFzzp
— Naan Mudhalvan - TN Skill (@naan_mudhalvan) November 18, 2024
டீடைல்ஸ் - மாணவர் பெயர், வயது, கல்லூரி பெயர், டிகிரி, நகரம், தொலைபேசி எண், ரீலின் பெயர், கேமரா விவரங்கள்
ரிவார்ட்ஸ் - சிறந்த முதல் 10 மாணவர்களின் படைப்புகள் நான் முதல்வன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
டெர்ம்ஸ் & கண்டிஷன்ஸ் - நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிலும் அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம். தமிழில் தான் ரீல்ஸ் எடுக்க வேண்டும். செங்குத்தாக ஹெச்.டி வடிவில் இருப்பது நல்லது. அதிகபட்சம் 100 எம்.பி வரை இருக்கலாம். ஒருவர் போட்டியாளர் ஒரு ரீல்ஸ் மட்டுமே அனுப்பலாம். குழுவாக 3 பேர் சேர்ந்து ஒரு ரீல்ஸ் அனுப்பலாம்.
கீ டேட்ஸ் - நவம்பர் 2 முதல் டிசம்பர் 1 வரை கால அவகாசம். இதன் முடிவுகள் நான் முதல்வன் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாடு இணையதளங்களில் வெளியிடப்படும்.