தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கு எது தடையாக வந்தாலும் உடைப்போம் !! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளான இன்று முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் உரை
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி புனித அன்னாள் அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் இத்திட்டத்தை துவங்கி வைத்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு,
அண்ணாவின் பிறந்தநாளில் துவங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் காமராஜர் பிறந்தநாளில் விரிவுபடுத்தபட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக 3995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 2.23 லட்சம் மாணவர்கள் பயனடையவுள்ளார்கள். 20 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் நாள்தோறும் சத்தான காலை உணவை உண்கிறார்கள்.
இந்த திட்டமானது பெற்றோர்களின் சுமையைக் குறைப்பது மட்டுமின்றி, மாணவர்களின் பள்ளி இடைநிறுத்தலையும் குறைத்திருக்கிறது. இத்திட்டம் நடத்துற வர்கத்துக்கு குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அரசு கொண்டு வருகின்ற திட்டங்களை பத்திரிகைகள் பாராட்டுதோ இல்லையோ, மக்கள் பாராட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
நாம் காலை உணவுத் திட்டத்தை துவங்கிய பிறகுதான், பல்வேறு மாநிலங்களிலும் ஏன் கனடா நாட்டிலும் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அரசின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது, எந்த ஊரிலும் எந்த பள்ளியிலும் உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது என்பதே.
உடைப்பது..
இதற்கு தனி கவனம் எடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க எதுவும் தடையாக இருக்க கூடாது என்று நினைக்கிறோம். அது பசியாக இருந்தாலும், நீட் தேர்வாக இருந்தாலும், புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் அதை உடைப்பதுதான் எங்களின் முதல் பணி என்றார். தொடர்ந்து பேசியவர், நீட் தேர்வை எதிர்த்த போது, ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.
ஆனால், இப்போது முறைகேடுகளை பார்த்து நீதிமன்றமே கேள்வி கேட்கிறது. ஒன்றிய அரசு நெருக்கடி நிலை பற்றி பேசுகிறார்கள். அவர்களிடம் நான் ஒன்றை ஒன்றை கேட்கிறேன்.
அவசர நிலையின் போது, மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றத் தயாரா? என்று வினவினார். கல்வியில் மட்டும் மாணவர்கள் கவனம் செலுத்துங்கள். கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அந்த சொத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றாக வேண்டும்.