முழு அரசியலில் இறங்க போகிறேன் - நடிகை நமீதா அதிரடி!
வருங்காலத்தில் முழு அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
நமீதா
தமிழில் முன்னனி முகமாக அறியப்பட்டவர் நடிகை நமீதா. தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை இன்றளவும் கையில் வைத்துள்ளார். விஜயின் அழகிய தமிழ்மகன், அஜித்தின் பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருப்பை மக்களிடம் பதிவி செய்தார். தொடர்ந்து நடிகர் விரேந்திர சவித்ரியை காதல் திருமணம் செய்துக் கொண்டார். சமீபத்தில்தான் இருவருக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார்.
முழு அரசியலில்..
இந்நிலையில், இவர் தனது கணவருடன் திருப்பதியில் சாம் தரிசனம் செய்துள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தன் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டி கோவிலுக்கு வந்ததாகவும், வருங்காலங்களில் முழுமையாக அரசியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் பாஜகவில் உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil