41 வயதில் கர்ப்பமான நடிகை நமீதா - செம்ம குஷியில் ரசிகர்கள்..!

Namitha
By Thahir May 10, 2022 11:00 PM GMT
Report

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா.

தமிழில் அஜித்,விஜய்,சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை நமீதா தனது கவர்ச்சி நடிப்பால் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஆக்கினார். இந்நிலையில் நமீதாவிற்கான பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.

இதையடுத்து விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர் தனது காதலர் வீரேந்திராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

இந்த நிலையில் 41 வயது நிறைந்த நமீதா தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தாய்மை, புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது.

நான் விரும்பியதெல்லாம் உன்னைதான். உனக்காக இவ்வளவு நாள் வேண்டிகொண்டிருந்தேன். உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகளை என்னால் உணர முடிகிறது.

இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.