அந்த கேள்வி'லாம் என்கிட்ட கேக்காதீங்க - செய்தியாளர் கேள்வி கடுப்பான நமீதா
நடிகை நமீதா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நமீதா
பாஜகவில் தன்னை இணைத்து கொண்டுள்ள நடிகை நமீதா, தமிழகத்தை தாண்டி தெலுங்கானா ஆந்திரா கர்நாடகா என பல மாநிலங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இன்று பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வந்துள்ள அவர், கோவிலில் வழிபாடு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பத்திரிகையாளர்களுக்கு வணக்கமும் நன்றியும் தெரிவித்து, கடந்த ஆண்டு முதல் கோவிலில் வழிபாடு செய்து அன்னதானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
அவரிடம் பிரஜ்வல் ரேவண்ணா குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, இது குறித்து தற்போது கேள்வி வேண்டாம் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் கடந்த 10 நாட்களாக வெளிமாநிலங்களில் பிரச்சாரம் செய்ததாக கூறி, அடுத்த ஒரு மாதத்திற்கு நிறைய வேலைகள் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த தேர்தலில் பாஜக நிச்சயமாக வெற்றி பெரும் என நம்பிக்கை தெரிவித்த நமீதா, இது குறித்து பதில் இப்பொது தன்னால் எதுவும் சொல்ல முடியாது என கூறினார். இந்த விவகாரத்தில் தப்பு என்றால் அதில் நீதிமன்றம் ஆக்ஷன் எடுக்கப்போகிறது என்றும் கூறினார்.
இது போன்ற கேள்விகளை என் தலைவரிடம் தான் கேட்கவேண்டும் என கூறிய அங்கிருந்த நகர்ந்து சென்றார்.

இந்தியா கைகளில் எடுத்துள்ள முக்கிய ஆயுதம்? கொம்பேறிமூக்கனாக மாற இருக்கும் இந்திய உளவுப் படை!! IBC Tamil
