இந்தியாவில் எங்கேயும் இந்த கேள்வியை கேட்டதில்லை; மதுரையில்தான் - நமீதா வருத்தம்
மீனாட்சி அம்மன் கோவிலில் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாக நமீதா வருத்தம் தெரிவித்துள்ளார்.
நமீதா
பாஜக உறுப்பினரும், பிரபல நடிகையுமான நமீதா மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கிருந்த அதிகாரி தன்னிடம் மதம் சாதி குறித்து கேட்டதாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருந்தேன். அப்போது அங்கிருந்த பெண் அதிகாரி ஒருவர் தன்னிடம் உங்களுடைய மதம் என்ன, எந்த வகுப்பை சேர்ந்தவர் என கேட்டார்.
சேகர்பாபு
மேலும் கோவில் நிர்வாகம் தன்னிடம் இந்து என்பதற்கான சான்றிதழை கேட்டனர். நான் இந்து மதத்தை சேர்ந்தவள். என் திருமணம் திருப்பதியில் நடந்தது. என் குழந்தைக்கு கூட கிருஷ்ணனின் பெயர்தான் வைத்துள்ளேன். என்னிடமும், என் கணவரிடமும் கடுமையாக நடந்து கொண்டனர்.
இந்தியாவில் எந்த கோவிலிலும் இது போன்ற கேள்வியை கேட்டதில்லை. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபுவிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.