Sunday, May 4, 2025

உடன் நடித்தவரை கரம் பிடிக்கும் மேகா ஆகாஷ் - மாப்பிள்ளை பிரபல அரசியல்வாதியின் மகனாம்

Megha Akash Tamil Cinema Tamil Actress
By Karthikraja 8 months ago
Report

நடிகை மேகா ஆகாஷிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

மேகா ஆகாஷ்

பேட்ட, எனை நோக்கிப் பாயும் தோட்டா, வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், வடக்குப்பட்டி ராமசாமி, மழைப் பிடிக்காத மனிதன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளவர் பிரபல நடிகை மேகா ஆகாஷ். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். 

megha akash engagement photo

இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணுவை திருமணம் செய்யவுள்ளார். ஆகஸ்ட் 22 ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிச்சயதார்த்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "இனி என்றென்றும் காதல், சிரிப்பு, மகிழ்ச்சி. என் வாழ்வின் காதலுடன் எனக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.  

சாய் விஷ்ணு

சாய் விஷ்ணு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசரின் இளைய மகன் ஆவார். சென்னை லயோலா கல்லூரியில் பி. காம் படித்த இவர், திரைப்படம் இயக்கம் குறித்த படிப்பை அமெரிக்கா சென்று படித்தார். ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான காலா, கபாலி ஆகிய படங்களில் பா.ரஞ்சித்துக்கு உதவி இயக்குநராக வேலை செய்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் 'பேசினால் போதும் அன்பே' என்ற குறும்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் திருமணம் சென்னையில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருமண நிகழ்வில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.