ஹனிமூனுக்கு ஏன் அப்படி பெயர் வந்தது தெரியுமா - காரணம் இதுதான்!
ஹனிமூன் என்பதற்கு உண்மையான அர்த்தம் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
ஹனிமூன்
ஆக்ஸ் ஃபோர்ட் டிக்ஷனரியின் படி, ஹனிமூன் என்ற வார்த்தைக்கு திருமணமான முதல் மாதத்தை ஹனிமூன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனெனில் அந்த முதல் மாதம்தான் சண்டைகள் ஏதுமின்றி பரஸ்பர புரிதல்களோடு, அன்யோனியமாக இருக்கும் காலம். இது திருமணத்திற்கு மட்டுமல்ல புது வேலையில் சேருகிறீர்கள் என்றாலும் முதல் 3 மாதங்களை ஹனிமூன் பீரியட் என்றே கார்பரேட் கலாச்சாரத்தில் அழைக்கிறார்கள்.
பின்னணி என்ன?
குறிப்பிட்ட காலத்திற்கு நாம் மகிழ்ச்சியாக இருந்தாலே ஹனிமூன் பீரியட்தான் என கருதுகின்றனர். ஹனிமூன் என்னும் வார்த்தையை முதன்முதலில் ஜெர்மனியில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5-ஆம் நூற்றாண்டில் பாபிலோனிய மக்கள் திருமணத்தின்போது மணமகளின் தந்தை பெண்ணின் மகிழ்ச்சிக்காக மீட் (mead) என்னும் பானம் கொடுப்பார்கள்.
அது தேன் மற்றும் தண்ணீர் கலந்து பதப்படுத்தி புளிக்க வைப்பார்கள். இதை மகளுக்காக பெண் வீட்டார் செய்து கொடுப்பார்கள். அது ஒருவகையான மது. அந்த பானத்தை திருமணமான ஒரு மாதம் முழுவதும் கொடுப்பது வழக்கம். மேலும், பாபிலோனர்களின் காலண்டர் கணக்கிடும் முறை நிலவின் சுழற்சி முறையை அடிப்படையாகக் கொண்டது.
இதனை கணக்கிட்டுதான் honey month என்று அழைத்துள்ளனர். அது நாளடைவில் மறுவி ஹனிமூன் என்றாகிவிட்டது. திருமணங்கள் அதிகமாக நிச்சயிக்கப்படும் மாதமும் ஜூன் மாதம்தான். அதேநேரம் தேன் அறுவடை அதிகமாக செய்யப்படுவதும் ஜூன் மாதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.