விரட்டி பிடிக்கப்பட்ட லாரி ; என்கவுண்டர் செய்த போலீஸ் - கண்டெய்னர் உள்ளே இருந்த அதிர்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரி ஒன்றை காவல் துறையினர் விரட்டி பிடித்துள்ளனர்.
தப்ப முயன்ற லாரி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று பைக் மற்றும் வாகனங்களை இடித்து விட்டு நிற்காமல் சென்றுள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் சில கிலோ மீட்டர் லாரியை பின்தொடர்ந்து மடக்கி பிடித்தனர்.
இதில் லாரி கண்டெய்னரை திறந்து பார்த்த போது, கட்டுக்கட்டாக பணம் மற்றும் சொகுசு கார் ஒன்று இருந்துள்ளது.
என்கவுண்டர்
கண்டெய்னரை திறக்க முயன்ற போது உள்ளே துப்பாக்கியுடன் இருந்த கொள்ளையர்கள் காவல் ஆய்வாளரை தாக்க முயன்ற போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விசாரணையில் கேரள மாநிலத்தில் ஏடிஎம் ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கண்டெய்னரில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
66 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 200 க்கு மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.