திரைப்பட பாணியை மிஞ்சிய திருட்டு - ஏ.டி.எம் இயந்திரத்தை கயிறு கட்டி இழுத்து சென்ற கொள்ளையர்கள்
ஏ.டி.எம் இயந்திரத்தை கயிறு கட்டி கொள்ளையர்கள் இழுத்து சென்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைப்பது போன்ற பல கொள்ளைச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் ஏ.டி.எம் இயந்திரத்தையே திருடி செல்வதை பார்த்துள்ளீர்களா? மகாராஷ்டிர மாநிலம் தரூர், பீட் பகுதியில் அப்படி ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அதன் வீடியோவும் வெளியாகியுள்ளது.
கடந்த (22.06.2024) சனிக்கிழமை அதிகாலையில் மகாராஷ்டிர மாநிலம் தரூர் பகுதியில் உள்ள ஏ.டி.எம்மில் 2 கொள்ளையர்கள் நுழைந்தனர். இருவரும் ரெயின் கோட் மற்றும் முகமூடி அணிந்திருந்தனர்.
ஏ.டி.எம் இயந்திரம்
மேலும் அவர்கள் கொண்டு வந்திருந்த கயிறு மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை சுற்றி கட்டினர். கயிறின் மறுமுனை வெளிய இருந்த காரில் இணைக்கப்பட்டிருந்தது. காரை ஒட்டி ஏ.டி.எம் இயந்திரத்தை பிடுங்க முயன்றனர்.
ஆனால் அவர்களின் முதல் முயற்சி தோல்வியுற்றது. மறுபடியும் கயிறை கட்டி இழுத்த போது ஏ.டி.எம் இயந்திரம் தனியாக வந்தது. இதை கண்காணிப்பு கேமராவில் கவனித்த வங்கி அதிகாரிகள் உடனே காவல் துறைக்கு தகவலை அளித்தனர்.
[]
விரைந்து வந்த காவல் துறை சம்பவ இடத்திலிருந்து 61 கி.மீ விரட்டி சென்று ஏ.டி.எம் இயந்திரத்தையும், ரூ 21 லட்சம் பணத்தையும் மீட்டனர். ஆனால் கொள்ளையர்கள் தப்பி விட்டனர். சிசிடிவி காட்சிகள் மூலம் காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.