15 நிமிஷம் தான்..ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பது எப்படி - கோச்சிங் செண்டர் நடத்திய ‘ஏடிஎம் பாபா’

Uttar Pradesh Crime
By Sumathi Apr 27, 2023 04:46 AM GMT
Report

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஏடிஎம் கொள்ளை

உத்தர பிரதேசம் லக்னோவில் உள்ள சுஷாந்த் கோல்ஃப் நகர் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் உடைத்து ரூ.39.58 லட்சத்தை திருடிச் சென்றனர். அதனைத்தொடர்ந்து போலீஸார் அதன் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில் நீல நிற காரை கண்டறிந்தனர்.

15 நிமிஷம் தான்..ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பது எப்படி - கோச்சிங் செண்டர் நடத்திய ‘ஏடிஎம் பாபா’ | How To Broke Atm Machine Coaching Centre Up

அதன் உரிமையாளர் பிஹாரைச் சேர்ந்த சீதாமர் கி. அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல் ஆய்வாளர் சைலேந்திர கிரி கூறுகையில், ஏடிஎம் கொள்ளை கும்பலில் இடம் பெற்ற நீரஜ் என்பவரிடம் விசாரித்தோம்.

பயிற்சி வகுப்பு

அவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் நுட்பத்தை பிஹாரின் சப்ரா பகுதியைச் சேர்ந்த சுதிர் மிஸ்ராவிடம் கற்றுக் கொண்டுள்ளார். பல மாநிலங்களைச் சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு, ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பது குறித்து 3 மாத பயிற்சியை அளித்துள்ளார். இதனால் ஏடிஎம் பாபா என அழைக்கப்பட்டுள்ளார்.

ஏடிஎம் அறையின் கண்ணாடிகளில் பனி படர்ந்தது போன்ற திரவத்தை அடிப்பது, அதன்பின் ஏடிஎம் இயந்திரத்தை 15 நிமிடத்துக்குள் உடைத்து பணத்தை எடுப்பது குறித்து நேரடி பயிற்சி அளித்துள்ளார். அதன்பின் 15 நாட்கள் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியை 15 நிமிடங்கள் மற்றும் அதற்கு முன்பாக முடிப்பவர்கள் மட்டுமே,ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடிப்பதற்கு களம் இறக்கப்படுகின்றனர். அவரை விரைவில் கைது செய்யவுள்ளோம் என அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.