தகைசால் தமிழர் விருது - ஆர்.நல்லகண்ணு தேர்வு!

Communist Party M K Stalin Tamil nadu
1 வாரம் முன்

தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆர்.நல்லக்கண்ணு

தகைசால் தமிழர் விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. அதன்படி, சுதந்திர தின விழாவில் ஆர்.நல்லக்கண்ணுக்கு விருது வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் கவுரவிக்க உள்ளார்.
தகைசால் தமிழர் விருது - ஆர்.நல்லகண்ணு தேர்வு! | Nallakannu Selected For Thagaisal Thamizhar Award

தமிழ்நாட்டுக்கும், தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் படுபட்டவர்களை கவுரவிக்கும் வகையில் தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு நல்லக்கண்ணு தேர்வாகியுள்ளார்.

தகைசால் தமிழர் விருது

தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.நல்லக்கண்ணுக்கு ரூ.10 லட்சம் பரிசு பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான நல்லகண்ணு, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகி ஆவார்.

கடந்த ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.